தீபாவளி திருவிழா

தீபாவளி என்றால், ‘ஒளிகளின் திருவிழா’ என்று அர்த்தம். ஒளி மனித வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஒளியின் அர்த்தம்

தீபாவளி என்றால், ‘ஒளிகளின் திருவிழா’ என்று அர்த்தம். ஒளி என்பது ஏன் மனித வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் ஒரு காரணம் நம் கண்கள் அமைந்துள்ள விதம் தான். மற்ற உயிரினங்களுக்கு, ஒளி என்றால் உயிர் வாழ தேவையான ஒன்று. ஆனால் மனிதனுக்கு, ஒளி என்பது, நாம் என்ன பார்க்கிறோம், பார்க்கவில்லை என்பதைப் பற்றியதாய் மட்டும் இல்லை, நம் வாழ்வில் வெளிச்சம் உதிக்கிறது என்று நாம் சொல்லும்போது, புதுத் தொடக்கத்தைக் குறிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேல், தெளிவு பிறக்கிறது என்று அதற்கு அர்த்தம். பல உயிரினங்களும் தன் இச்சையாய் வாழ்கின்றன. அதனால், அவைகளுக்கு எந்தவித குழப்பமும் இல்லை, என்ன செய்ய வேண்டும், அல்லது செய்யக் கூடாதென்று.

நரகாசுரனின் கதை

‘கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்’ என்று வரலாறு இதனைச் சொல்கிறது. நரகாசுரன் என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல, ஆனால், அவன் அனைவருக்கும் நரகத்தை அனுபவமாய் வழங்கியதால் நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். நரக அனுபவத்தை கிருஷ்ணன் முடிவுக்குக் கொண்டு வந்ததால், மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றிக் கொண்டாடினர். நரகாசுரன் சம்பவம் புதிதுதான் என்கிறார்கள். ஆனால், வருடத்தின் இப்பகுதியில் விளக்கேற்றும் கலாச்சாரம் 12, 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வருடத்தின் இந்தச் சமயத்தில் வாழ்வில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படுவதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். நீங்களே ஒரு பட்டாசு போல வெடிப்பாய், துடிப்பாய் வாழாவிட்டால், குறைந்தது உங்களைச் சுற்றி வெடிக்கும் பட்டாசுகளாவது உங்களைச் சற்று விழிக்கச் செய்யட்டும். இந்த வழக்கத்திற்குப் பின்னுள்ள நோக்கம் இதுதான். இந்தியாவில், நரக சதுர்தசி வரும் காலத்தில், காலை 4 மணியில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கத் துவங்கும். அனைவரும் எழுகின்றனர், உயிர்ப்புடன் உள்ளனர்.

தீபாவளியின் கொண்டாட்டங்கள்

தீபாவளி அன்று, ஒவ்வொரு நகரமும், கிராமமும், ஊரும் எல்லா இடங்களும், ஆயிரக்கணக்கான தீபங்களால் ஒளிர்கின்றன. ஆனால் இந்த கொண்டாட்டம் வெளியில் தீபங்கள் ஏற்றுவது மட்டும் அல்ல, உள்நிலையிலும் வெளிச்சம் வரவேண்டும். வெளிச்சம் என்றால் தெளிவு. ஒவ்வொரு மூலையிலிருந்தும் தூசியைத் துடைக்கவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எடுத்துச் செல்ல இனிப்புப் பெட்டிகளை வரிசைப்படுத்துங்கள்! இந்த சந்தர்ப்பத்திற்காக உங்கள் புதிய அல்லது சிறந்த ஆடைகளை தயார் செய்யவும்! தீபாவளி திருநாளன்று அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து ஊற வைத்து பின்னர் நீராடுவர். வீடுகள் அனைத்தும் வாசல்களில் வண்ணக் கோலமிட்டு, தோரணம்கட்டி புதுப் பொலிவுடன் காணப்படும். நீராடி புத்தாடை உடுத்தி, அவரவரது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று தங்களது கடவுளரை வணங்கி தீபாவளித் திருநாளை துவங்குவர். தீபாவளி அன்றைய பகல் பொழுதில் தீபாவளி பட்டாசுகளான அணுகுண்டு, சீனிவெடிகள், சரவெடிகள் போன்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். இரவு நேரம் வந்தவுடன் வானவெடிகள், மத்தாப்புகள், புஸ்வானங்கள், சங்கு சக்கரங்கள், பல்வேறு நவீன கலர் கலரான வெடிகளை தங்களது வீடுகளின் முன்னர் வெடித்து மகிழ்வர்.

இந்தியாவில் தீபாவளி

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நேரம் இது. கொண்டாட்டம் மற்றும் சுயபரிசோதனைக்கான நேரம். தீமைக்கு மேல் நன்மையின் காட்சி. இந்தியாவில் உள்ள அனைவரும், மதம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி, கண்கவர் தீபத் திருவிழாவில் மகிழ்கிறார்கள். வீடுகள் ஒளிரும் மற்றும் திறந்திருக்கும், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு ஆகியவற்றினை - தங்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் அழைக்கின்றார்கள்.

தீபாவளி திருவிழா | ஒளிகளின் திருவிழா
Crackers Corner

Sivakasi Fireworks No.1 Retailers

Disclaimer: The views and opinions shared in this site solely belong to the individual authors and do not necessarily represent the views of Crackers Corner. Crackers Corner cannot be held responsible for any inaccuracies.

Permissions: Authors are solely responsible for securing required permissions for the content and images used in their posts.